கடலூரில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா


கடலூரில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 14 July 2020 5:40 AM IST (Updated: 14 July 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

கடலூர், 

கடலூரில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

குழந்தைகளுக்கு உணவு

காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா கடலூரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் வடுகப்பட்டியில் உள்ள மன நலம் குன்றிய குழந்தைகள் இல்லத்தில் வைத்து கேக் வெட்டி, அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மனித உரிமை பிரிவு மாநில செயலாளர் செல் ஆர்.ஆறுமுகம், மாநில சமூக ஊடகப்பிரிவு கே.மணிகண்டன், சிவாலயா ஸ்ரீதர், ராஜ்குமார், பண்ருட்டி அருள்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ரத்ததானம்

இதேபோல் கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா நடந்தது. இதையொட்டி கடலூர் கடற்கரை சாலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணைத்தலைவர் பாண்டுரங்கன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கலையரசன், மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திகேயன், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் கலைச்செல்வன், மகளிரணி மாவட்ட தலைவர் கலைச்செல்வி, மாணவரணி மாவட்ட தலைவர் முகேஷ், சேவா தளம் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் அணி மாவட்ட தலைவர் ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரஹீம் வரவேற்றார். இதில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

இதை தொடர்ந்து கடலூர் கே.என். பேட்டையில் மகளிர் அணி மாநில செயலாளர் மகாலட்சுமி தலைமையில் சந்திரசேகர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கட்சி கொடி ஏற்றினார். இதில் நிர்வாகிகள் துரைசாமி, அன்பழகன், ராஜாராம் ,மணிவண்ணன், தேவநாதன், ஏழுமலை, வசந்தராணி, ஐயப்பன், உமாபதி, ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story