ரூ.24 ஆயிரத்துக்கு பழைய நோட்டுகள் வைத்திருந்த மாற்றுத்திறனாளி தம்பதிக்கு உதவிய கலெக்டர் ரூ.25 ஆயிரத்துக்கு காசோலை வழங்கினார்
ரூ.24 ஆயிரத்துக்கு பழைய நோட்டுகள் வைத்திருந்த மாற்றுத்திறனாளி தம்பதிக்கு, ரூ.25 ஆயிரத்துக்கு காசோலை வழங்கி கலெக்டர் கதிரவன் உதவினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பொதியமூப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சோமு (வயது 58). பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி பழனியம்மாள் (53). இவரும் மாற்றுத்திறனாளி. இவர்கள் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நிதி உதவியை மாதந்தோறும் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். குழந்தைகள் கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு சோமு ஊர், ஊராய் சென்று ஊதுபத்தி விற்ற பணத்தை அவருடைய தாயாரிடம் கொடுத்து வந்தார். தாயார் மகன் கொடுத்த பணத்தை ஒரு பானையில் போட்டு சேகரித்து வந்தார்.
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் சோமுவுக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. ஏற்கனவே தாயாரிடம் பணம் கொடுத்து வைத்திருந்த பணம் நினைவுக்கு வந்தது. தாயார் பணம் சேகரித்து வைத்திருந்த பானையை எடுத்து சோமுவும், பழனியம்மாளும் பணத்தை வெளியே எடுத்தனர்.
பணத்தை எண்ணிப்பார்த்தபோது அதில் ரூ.24 ஆயிரத்து 500-க்கான பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.1,000 மற்றும் ரூ.500 ஆக இருந்தன. இந்த ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு விட்டதால், செலவு செய்ய முடியாமல் திகைத்தனர். மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு மாற்றுத்திறனாளி தம்பதியினர் சிரமப்பட்டு வருவது குறித்த தகவல் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவனுக்கு கிடைத்தது. உடனடியாக சோமு மற்றும் பழனியம்மாள் ஆகியோரை ஈரோடு வரவழைத்த கலெக்டர் சி.கதிரவன் அவர்களிடம் இருந்த மதிப்பிழப்பு செய்யப்பட்ட 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கான பழைய ரூபாய் நோட்டுகளை பெற்று மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரிகளிடம் வழங்கி கருவூலத்தில் சேர்க்க உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி மாவட்ட கலெக்டரின் நிதியில் இருந்து ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை சோமுவிடம் கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார். இதனால் மாற்றுத்திறனாளி தம்பதி மகிழ்ச்சி அடைந்தார்கள். கலெக்டரின் நடவடிக்கையை பொதுமக்களும் பாராட்டினார்கள்.

Related Tags :
Next Story