வேதாரண்யம் பகுதியில் விட்டு விட்டு மழை: சேகரித்த உப்பை பாதுகாக்கும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரம்


வேதாரண்யம் பகுதியில் விட்டு விட்டு மழை: சேகரித்த உப்பை பாதுகாக்கும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரம்
x
தினத்தந்தி 14 July 2020 8:31 AM IST (Updated: 14 July 2020 8:31 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சேகரித்த உப்பை பாதுகாக்கும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளியில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த 15 நாட்களாக வேதாரண்யம் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்றும்(திங்கட்கிழமை) வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி பகுதிகளில் லேசான தூறல் மழை பெய்தது. கருப்பம்புலம், கடினல்வயல், குரவப்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பல பகுதியில் காலை ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக கனமழை பெய்தது.

உப்பள பகுதிகளுக்கும் மழை தொடரலாம் என உப்பு உற்பத்தியாளர்கள் நினைத்து தாங்கள் இந்த சீசனில் ஆங்காங்கே உற்பத்தி செய்த உப்பை சிறு மலைக்குன்றுகள் போல் தேக்கி வைக்கின்றனர். தற்சமயம் அந்த உப்பு குவியல்களை அங்காங்கே உள்ள இடங்களில் கொண்டு வந்து ஒன்றாக சேர்த்து பெரிய மலை போல் குவித்துள்ளனர்.

மழையால் உப்பு சேதமடையாமல் இருப்பதற்காக பனை ஓலை மற்றும் தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர். இப்படி சேமித்து வைக்கும் உப்பு குவியலுக்கு அம்பாரம் என்று பெயர். மழைக்காலத்தில் இந்த உப்பை பிரித்து உப்பு உற்பத்தியாகாத காலத்தில் விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். 

Next Story