மாவட்டத்தில் கோரிக்கை அட்டையுடன் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்டத்தில் உள்ள தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டையுடன் ஈடுபடும் போராட்டத்தை நேற்று தொடங்கினார்கள். தர்மபுரியில் நடைபெற்ற போராட்டத்தை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கலாவதி தொடங்கி வைத்தார். செயலாளர் செல்வம், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், நிர்வாகிகள் முரளி, ராஜி, ஆறுமுகம் வெங்கட்ராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
தர்மபுரி நகராட்சி பகுதியில் பணிபுரியும் 110 நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் 90 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒவ்வொரு நாளைக்கும் 2 முககவசங்கள் வழங்க வேண்டும். கையுறைகள், கிருமிநாசினி, சோப்பு ஆகியவற்றை போதிய அளவில் தரமானதாக வழங்க வேண்டும். தூய்மை பணிக்கு பயன்படுத்தும் மண்வெட்டி, வாளிகளை தேவையான அளவில் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் தூய்மை பணியில் ஈடுபடும் 210 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 350 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அளிக்க வேண்டும்.
கிராமப்புற ஊராட்சிகளில் குறைந்தபட்ச ஊதிய அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். கொரோனா பரவல் தடுப்புக்கான பணியில் தூய்மை பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியமும், விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு தலா ரூ.600-ம் ஊதியமாக வழங்க வேண்டும். தினக்கூலி மற்றும் ஒப்பந்த முறையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண உதவி அளிக்க வேண்டும்.
அனைத்து வகை தூய்மை பணியாளர்களையும் காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பென்னாகரம், மாரண்டஅள்ளி, பாலக்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 10 பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற கோரிக்கை அட்டையுடன் போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் இந்த போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.

Related Tags :
Next Story