சென்னையில், தக்காளி விலை ‘கிடுகிடு’ உயர்வு - ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை
சென்னையில், தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
சென்னையில் ஏற்கனவே கொரோனா வீதி மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், தக்காளி விலையும் சத்தமில்லாமல் மக்களை அதிர்ச்சிக்கு ஆட்படுத்தி வருகிறது.
கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.45 வரை கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கு விற்பனையானது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனையானது. தக்காளியின் இந்த ‘கிடுகிடு’ விலை உயர்வு பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
திருமழிசை காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், மளிகைக் கடைகள் மற்றும் சாலையோர காய்கறி கடையில் தக்காளி விலை ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயம், பீன்ஸ், கேரட், இஞ்சி உள்ளிட்ட காய்கறி விலையும் உயர்ந்திருக்கிறது.
Related Tags :
Next Story