தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். நேற்று 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் 709 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று மேலும் 29 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருந்தாளுனரும் அடங்குவார்.
தஞ்சையில் 9 பேரும், பட்டுக்கோட்டையில் 6 பேரும், கும்பகோணத்தில் 5 பேரும், கபிஸ்தலம், மெலட்டூர், பாபநாசம், வல்லம், மாரியம்மன்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் அடங்குவர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கும்பகோணம் பகுதியை சேர்ந்த 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினார். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 422 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 305 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Tags :
Next Story