திருவாரூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 19 பேருக்கு கொரோனா
திருவாரூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 19 பேருக்கு நேற்று கொரோனா நோய் தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 786 ஆக உயர்ந்துள்ளது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 767 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவர் உள்பட 5 பேர், குடவாசல் பகுதியை சேர்ந்த 5 பேர் மற்றும் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று 19 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 786 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 307 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
திருவாரூர் தெற்கு வீதியில் இயங்கி வந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துக்குமரன் தலைமையில் சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் வங்கிக்கு சென்று கிருமி நாசினி தெளித்தனர். வங்கியில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.
மேலும் வங்கியில் பணிபுரிந்த ஊழியர்களை தனிமைப்படுத்தி கொள்ளவும், தேவைப்படுவோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட வங்கி ஊழியர் தங்கி இருந்த குடியிருப்பு பகுதியிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நீடாமங்கலம் அப்பாவு பத்தர் சந்து பகுதியை சேர்ந்த 23 வயது கார் டிரைவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த 18 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் மேலும் 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் பழவியாபாரி, ஒருவர் கூல்டிரிங்ஸ் விற்பனையாளர் என தெரிகிறது.
3 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து நீடாமங்கலம் வட்டார மருத்துவ அதிகாரி ராணிமுத்து லட்சுமி, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர் ஆகியோர் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்பகுதியில் இயங்கி வந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது.
திருமக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒவ்வொரு வாரமும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடப்பது வழக்கம். அதன் பேரில் நேற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story