ஜவ்வாதுமலை காட்டுப்பகுதியில், தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானையுடன் ‘செல்பி’ எடுத்த வாலிபர்கள்


ஜவ்வாதுமலை காட்டுப்பகுதியில், தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானையுடன் ‘செல்பி’ எடுத்த வாலிபர்கள்
x
தினத்தந்தி 15 July 2020 3:45 AM IST (Updated: 15 July 2020 7:02 AM IST)
t-max-icont-min-icon

ஜவ்வாதுமலை காட்டுப்பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை அருகில் நின்று ‘செல்பி’ எடுத்த வாலிபர்களால் பொதுமக்கள் மற்றும் விலங்கின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாணியம்பாடி, 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த காவலூர், பீமகுளம், சத்திரம், அருணாச்சலகொட்டாய், நாயக்கனூர் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக ஒற்றை கொம்புடன் சுற்றித்திரியும் காட்டு யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மலைரெட்டியூர் பகுதியில் அந்த ஒற்றை கொம்பு காட்டு யானை தண்ணீர் குடிப்பதற்காக வந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி வாலிபர்கள், யானையின் அருகே நின்று தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். பின்னர் அவர்கள், அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். 

விபரீதம் அறியாமல் வாலிபர்கள் யானை அருகில் நின்று ‘செல்பி’ எடுத்துக்கொண்டது பொதுமக்கள் மற்றும் விலங்கின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story