சோமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சோமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள பழையநல்லூர் அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சம்பத் (வயது 51). காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ரேவதி (21). மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். திருமணத்துக்கு நகைகளை கஷ்டப்பட்டு சேர்க்க வேண்டியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை சேர்த்து வரும் ஜனவரி மாதம் திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும் என ரேவதியின் பெற்றோர் பேசி கொண்டு கொண்டிருந்ததை அவர் கவனித்துக்கொண்டு இருந்தார். பெற்றோர் படும் கஷ்டத்தை நினைத்து ரேவதி வருந்தியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ரேவதியின் பெற்றோர் திருவேற்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக ரேவதியிடம் கூறிவிட்டு நேற்று முன்தினம் அங்கு சென்றனர். பின்னர் மகளுக்கு போன் செய்தனர். போன் எடுக்கப்பட வில்லை. திரும்பி வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரேவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சோமங்கலம் போலீசார் ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story