தபால் நிலையம் திறப்பு ஊழியர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
ஈரோடு காந்திஜிரோட்டில் தலைமை தபால் நிலையம் திறப்பு ஊழியர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு காந்திஜிரோட்டில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2-ந் தேதி தபால் நிலையம் மூடப்பட்டது. இங்கு எந்தவிதமான பரிவர்த்தனைகளும் நடைபெறவில்லை. மேலும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், தபால் நிலையத்துக்கு குறிப்பிட்ட காலத்தில் வந்து சென்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இந்தநிலையில் தபால் நிலையம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. தபால் நிலையத்துக்கு வந்த அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்து அதன்பின்னரே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பொது மக்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. முகக்கவசம், சமூக இடைவெளி தீவிரமாக பின்பற்றப்பட்டது.

Related Tags :
Next Story