ராய்காட் இரும்பு ஆலையில் பயங்கர விபத்து: கியாஸ் டேங்க் வெடித்து 2 தொழிலாளர்கள் பலி


ராய்காட் இரும்பு ஆலையில் பயங்கர விபத்து: கியாஸ் டேங்க் வெடித்து 2 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 15 July 2020 3:45 AM IST (Updated: 15 July 2020 7:41 AM IST)
t-max-icont-min-icon

ராய்காட்டில் இரும்பு ஆலையில் கியாஸ் டேங்க் வெடித்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பை, 

ராய்காட் மாவட்டம் கொப்போலி பகுதியில் இந்தியா ஸ்டீல் ஒர்க்ஸ் என்ற ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரும்பை உருக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது. ஊரடங்கு காரணமாக வழக்கத்தைவிட குறைவான தொழிலாளர்களே ஆலையில் இருந்து உள்ளனர்.

அப்போது திடீரென ஆலையில் இருந்த கியாஸ் டேங்க் பயங்கரமாக வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் அங்கு நின்று கொண்டு இருந்த தொழிலாளர்கள் தினேஷ் (வயது55), பிரமோத் (30) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு தொழிலாளி படுகாயமடைந்தார்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் பலியானவர்களின் உடலகளை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story