தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதார திட்டங்கள்; கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்


தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதார திட்டங்கள்; கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்
x
தினத்தந்தி 15 July 2020 9:33 AM IST (Updated: 15 July 2020 9:33 AM IST)
t-max-icont-min-icon

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதார திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர்,

பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்திடவும், தமிழக கடற்பகுதியில் மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் மீன்வளத்தை அழிக்கக் கூடிய தடைசெய்யப்பட்ட சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளின் பயன்பாட்டை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தின் கடல்மீன்வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் அதை கைவிட்டு மாற்று வாழ்வாதாரமாக கீழ்கண்ட திட்டங்களில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதன்படி, 40 சதவீத மானியத்துடன் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கும் திட்டம், 50 சதவீத மானியத்துடன் ரூ.60 லட்சம் மதிப்பில் மாநில அரசு திட்டத்தின் கீழ் செவுள்வலை மற்றும் தூண்டில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கும் திட்டம், தற்போது பயன்பாட்டில் உள்ள இழுவலை படகுகளை ரூ.15 லட்சம் மானியத்துடன் செவுள் வலை படகுகளாக மாற்றும் திட்டம்.

மேற்கண்ட திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் மீனவர்கள் சம்பந்தப்படட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story