முழு ஊரடங்கு அமலில் இருந்தும் மதுரையில் கொரோனா பாதிப்பு உயர காரணம் என்ன?
மதுரையில் முழு ஊரடங்கு அமலில் இருந்தும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதற்கான காரணம் குறித்து அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.
மதுரை,
மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்தும் கொரோனா பாதிப்பு குறையாதது ஏன்? என்பது மதுரை மக்களிடையே பெரும் கேள்வியாக உள்ளது.
இதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் அளித்த விளக்கம் வருமாறு:-
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களை கண்டறிந்து அவர்கள் உடனடியாக தனிப்படுத்தப்படுகின்றனர். மதுரையில் 219 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இதுபோல், நடமாடும் பரிசோதனை வாகனமும் செயல்பாட்டில் உள்ளது.
இதுதவிர மாவட்ட சுகாதரத்துறையின் மூலம் களபணியாளர்கள், நர்சுகள் மூலம் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மதுரையில் ஊரடங்கு அமலில் இருந்ததால் அனைவரும் வீட்டிலேயே இருந்து வந்தனர். இதுபோல், லேசான காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் கூட, முகாம்களுக்கு வந்து பரிசோதனை செய்து கொண்டனர். இதன் மூலம் 1½ லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த முகாம்களில் யாருக்கேனும் அதிக காய்ச்சல் இருந்தால், அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அதுபோல், காய்ச்சல் பரிசோதனை மையங்களிலேயே கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதன் விளைவாக மதுரையில் நாளொன்றுக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.
இதில் 1500 முதல் 2000 வரை சளி மாதிரிகள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சோதனை செய்யப்படுகிறது. மீதமுள்ள மாதிரிகள் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த மாதிரிகளின் முடிவுகளால் தான் தற்போது அதிக பாதிப்பு பதிவு செய்யப்படுவதற்கு காரணம் ஆகும்.
யாருக்கு கொரோனா இருக்கிறது என்பது உடனடியாக கண்டறிவதால், ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு நோய் பரவுவதை தடுக்க முடிகிறது. இருந்தாலும் மக்கள் அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story