எடப்பாடி நகராட்சிக்கு ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் கலெக்டர் ராமன் ஆய்வு


எடப்பாடி நகராட்சிக்கு ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் கலெக்டர் ராமன் ஆய்வு
x
தினத்தந்தி 15 July 2020 1:51 PM IST (Updated: 15 July 2020 1:51 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி நகராட்சிக்கு ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

எடப்பாடி.

எடப்பாடி நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளாண்டிவலசை பகுதியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. அதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை திறந்து வைக்க உள்ளார். பணிகள் நிறைவடைந்த புதிய நகராட்சி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் அமிர்தலிங்கம், நகராட்சி ஆணையாளர் சென்னு கிருஷ்ணன், பொறியாளர் முருகன், முன்னாள் நகரமன்ற தலைவர் கதிரேசன், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன், சுகாதார அலுவலர் செந்தில்குமார், தாசில்தார் கோவிந்தராஜூ ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story