செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 186 பேருக்கு கொரோனா


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 186 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 July 2020 6:45 AM IST (Updated: 16 July 2020 6:45 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 186 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள பேரமனூர் தீரன் சின்னமலை குறுக்கு தெருவில் வசிக்கும் 22 வயது, 24 வயது வாலிபர்கள், பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்.பணியாளர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 21 வயது வாலிபர், 21 வயது இளம்பெண், ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ரெயில் செந்தில் நகர் பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர், ரோகிணி நகர், ரெயில்வே ஸ்டேஷன் தெருவை சேர்ந்த 31 வயது வாலிபர், 32 வயது இளம்பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் நேற்று ஒரே நாளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 186 பேருக்கு கொரோனா உறுதியானது. மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,741 ஆக உயர்ந்தது. இவர்களில் 6,299 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 48 வயது ஆண், 86 வயது முதியவர், 79 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே மாளந்தூர் ஊராட்சியை சேர்ந்த 45 வயது பெண், 23 வயது வாலிபர், வெங்கல் ஊராட்சியை சேர்ந்த 75 வயது முதியவர், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்தில் மணவாள நகரில் 8 பேருக்கும், போளிவாக்கம், தண்டலம் கண்டிகை, கடம்பத்தூரில் தலா ஒருவர் என மொத்தம் 11 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்து 573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 335 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 3,104 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 134 பேர் பலியாகி உள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள மேல்படப்பை கிழக்கு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 27 வயது வாலிபர், தானிஷ் நகர் பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர், பி.டி.ஒ. ஆபீஸ் சாலை பகுதியைச் சேர்ந்த 28 வயது வாலிபர், எஸ்.கே.அவென்யூ சண்முகா நகர் பகுதியைச் சேர்ந்த 27வயதுள்ள ஆண் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

மேலும் ஓசூரா அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 22 வயது வாலிபர் மற்றும் ஆதனூர் ஊராட்சியில் உள்ள வேதாச்சலம் நகர் பகுதியைச் சேர்ந்த 41 வயது ஆண், ஒரத்தூர் ஊராட்சி நீலமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபர், ஒரகடம் கண்டிகை பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இவர்களுடன் சேர்த்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,255 ஆக உள்ளது. இவர்களில் 1,932 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2,268 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். தொற்றுக்கு 2 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது.

Next Story