வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் ரூ.6 கோடியில் பூங்காவுடன் சாலை அமைக்கும் பணி அமைச்சர் ஆய்வு


வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் ரூ.6 கோடியில் பூங்காவுடன் சாலை அமைக்கும் பணி அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 16 July 2020 3:49 AM GMT (Updated: 16 July 2020 3:49 AM GMT)

வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் ரூ.6 கோடியில் பூங்காவுடன் கூடிய சாலை அமைக்கும் பணியை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் ரூ.6 கோடியில் பூங்காவுடன் கூடிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட சன்னதி கடற்கரையில் ரூ.6 கோடியில் உயர் கோபுர மின்விளக்கு, சிறுவர்கள் விளையாட்டு பூங்கா வசதியுடன் கூடிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

20-ந்தேதி சாலை திறக்கப்படும்

இந்த சாலை வருகிற 20-ந்தேதி ஆடி அமாவாசை அன்று புனித நீராட வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக திறந்துவிடப்படும். வயதானவர்கள் கடற்கரை வரை வாகனங்களில் வந்து கடலில் புனித நீராடலாம். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் சுப்பையன், திலீபன், ஒன்றியக்குழு தலைவர் அன்பழகன், வழக்கறிஞர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story