மாவட்ட செய்திகள்

திருச்சூரில் கொரோனா தனிமை வார்டாக பயன்படுத்த சொந்த வீட்டை கொடுத்த பெண் போலீஸ் + "||" + The female police officer who gave her own house to use as a corona solitary ward in Thrissur

திருச்சூரில் கொரோனா தனிமை வார்டாக பயன்படுத்த சொந்த வீட்டை கொடுத்த பெண் போலீஸ்

திருச்சூரில் கொரோனா தனிமை வார்டாக பயன்படுத்த சொந்த வீட்டை கொடுத்த பெண் போலீஸ்
திருச்சூரில் கொரோனா தனிமை வார்டாக பயன்படுத்த சொந்த வீட்டை பெண் போலீஸ் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாவூர்,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் காவல் நிலையத்தில் ஜான்சி (வயது 44) என்பவர் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு போர்க்குளம் என்ற இடத்தில் சொந்த வீடு உள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களாக ஜான்சி தனது குடும்பத்துடன் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.


சிறப்பு விமானம்

கடந்த சில நாட்களுக்கு முன் காட்டக்காம்பாள் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் வளைகுடா நாட்டில் இருந்து அவசரமாக கிடைத்த அனுமதியுடன் சிறப்பு விமானம் மூலம் கேரளா வந்தது. காட்டக்காம்பாளில் இவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இதனால் அவர்கள் வாடகைக்கு வீடு தேடினர். ஆனால் கொரோனா பரவல் பீதி காரணமாக அவர்களுக்கு யாரும் வாடகைக்கு வீடு கொடுக்கவில்லை. 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்த பின்னர் வேண்டுமானால் வீடு தர முயற்சிப்பதாக ஒரு சிலர் கூறி உள்ளனர்.

இதனால் மழைக்காலத்தில் கூட்டை இழந்த பறவைகள் போல், அவர்கள் பரிதவித்து போய், தங்களுக்கு உதவி கோரி குன்னங்குளம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று உள்ளனர். அவர்களின் நிலைமையை உணர்ந்த ஜான்சி, அவர்களுக்கு உதவ முன்வந்தார்.

14 நாட்கள் தனிமைப்படுத்தல்

இதைத் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்காக, போர்க்குளத்தில் தனது சொந்த வீட்டை தூய்மைப்படுத்தி வளைகுடாவில் இருந்து வந்த அந்த குடும்பத்தினருக்கு அவர் கொடுத்தார். வாடகை வீட்டுக்கே வழி இல்லாமல் கையறுநிலையில் இருந்த அவர்களுக்கு ஜான்சி இலவசமாக வீடு கொடுத்தது அவர்களுக்கு கண்ணீரை வரவழைத்தது. தற்போது அந்த குடும்பத்தினர் ஜான்சியின் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஜான்சி கூறுகையில், கொரோனா தொற்று அனைவரையும் நிலைகுலைய செய்து உள்ளது. எனவே இந்த கொரோனா பிரச்சினை முடியும்வரை இந்த வீட்டை தனிமை வார்டாக பயன்படுத்த அரசுக்கு வழங்க முடிவு செய்து உள்ளேன் என்றார். பெண் போலீஸ் ஜான்சி செய்த உதவியை கேள்விப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில், காதலனுடன் சேர்த்து வைக்க கோரி போலீஸ் நிலையத்தில் பெண் தர்ணா
சேலத்தில் காதலனுடன் சேர்த்து வைக்க கோரி போலீஸ் நிலையத்தில் பெண் தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால் காதலனுக்கு நேற்று வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. பெண் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம்: ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் கற்பழித்து கொன்றேன்’ கைதான உறவினர் வாக்குமூலம்
பெரியபாளையம் அருகே பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உறவினர் கைது செய்யப்பட்டார். ஆசைக்கு இணங்க மறுத்ததால் கற்பழித்து கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
3. ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் மீது புகார்: டி.ஜி.பி. அலுவலகம் முன் குழந்தையுடன் பெண் திடீர் போராட்டம்
ஐ.ஆர்.பி.என். போலீஸ் காரர் மீது புகார் தெரிவித்து டி.ஜி.பி. அலுவலகம் முன் குழந்தையுடன் பெண் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. மராத்தியில் பேச உரிமையாளர் மறுத்ததால் பிரச்சினை நகைக்கடை முன் 20 மணி நேரம் தர்ணா செய்த பெண் எழுத்தாளர்
மும்பையில் மராத்தியில் பேச மறுத்த உரிமையாளரை கண்டித்து பெண் எழுத்தாளர் ஒருவர் 20 மணி நேரம் நகைக்கடை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. தூத்துக்குடியில் பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு பெண் கொடூரக்கொலை கணவருக்கு வலைவீச்சு
தூத்துக்குடியில் தலையில் கல்லைப்போட்டு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.