நாகர்கோவிலில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


நாகர்கோவிலில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 July 2020 4:43 AM GMT (Updated: 16 July 2020 4:43 AM GMT)

நாகர்கோவிலில் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,


காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று குமரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும், அமைப்புகளின் சார்பிலும் மாலை அணிவிக்கப்பட்டது.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் எம்.பி., மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட முன்னாள் தலைவர் ராபர்ட் புரூஸ், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மண்டல தலைவர் ஜெயச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர்கள் நவீன்குமார், சிவபிரபு, நிர்வாகிகள் மகேஷ்லாசர், சாம்மோகன்ராஜ், வைகுண்டதாஸ், கிளாட்சன், அசோக்ராஜ், காலபெருமாள், முருகேசன், அருள் சபிதா ரெக்சலின், ஹெலன் சிறில், ஜான்சி ஆல்பர்ட், தர்மபுரம் கென்னடி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.- தி.மு.க.

குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காமராஜர் சிலைக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் மகேஷ், நிர்வாகி தில்லைச் செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.- த.மா.கா.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காமராஜர் சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் இணை செயலாளர் அம்மு ஆன்றோ, துணை செயலாளர் சுல்பிகர் அலி, பேரவை செயலாளர் கிறைஸ்ட் மில்லர், மகளிர்அணி செயலாளர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட் டது. இதில் அவைத்தலைவர் பால்ராஜ், மாநகர செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமரி கிழக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் டி.ஆர்.செல்வம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பொருளாளர் சிவகுமார், நிர்வாகிகள் பொன்.மாதவன், செல்வி விலாஸ்குமார், புரோனோ, அஸ்வின், செந்தூர் பாண்டியன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமரி கிழக்கு மாவட்ட சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளர் ஜார்ஜ் பில்ஜூன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட தலைவர் ராஜன், செயலாளர் தில்லைநாதன், பொருளாளர் ராஜா சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அருள்செல்வின், மகளிர்அணி செயலாளர் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி

ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவேந்தன், பகலவன், அல்காலித் ஆகியோரும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நாம் தமிழர்கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயன்றீன், செயலாளர் பெல்வின் ஜோ, பொருளாளர் அனிட்டர் ஆல்வின் மற்றும் நிர்வாகிகள் வர்கீஸ், அருள் அஜித், சரத், ரூபன், ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் துணை தலைவர்கள் சுகுமாரன், நடராஜன், பொதுச்செயலாளர்கள் ஜார்ஜ் பிலீஜின், சுயம்பு, மகளிர் அணி தலைவி விஜயலெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி குமரி கிழக்கு மாவட்ட தலைவர் அன்புகிருஷ்ணன் தலைமையில் காமராஜர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது 300 ஏழைகளுக்கு அரிசி, காய்கறி, முக கவசம் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அமைப்பாளர் பச்சைமால், துணைத்தலைவர் சுரேஷ்குமார், வக்கீல் அணி தலைவர் துரைராஜ், மாநகர தலைவர் பிரேம், செயலாளர் அனிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடார் மகாஜன சங்கம்

மதசார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நாடார் மகாஜன சங்கத்தின் சார்பில் அதன் துணைத்தலைவரும், பழவிளை காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளருமான சுரேந்திரகுமார் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் சி.என்.செல்வன், குசலவசாமி, கிருஷ்ணதாஸ், கில்பர்ட், ராஜதுரை, எஸ்.எஸ்.மணி, சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தலைவர் காமராஜ், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பனங்காட்டுப்படை கட்சி, சத்ரிய நாடார் சங்கம், சான்றோர் நாடார் சங்கம் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நாடார் மக்கள் பேரவை

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு நாடார் மக்கள் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் அன்னதானமும், தொடர்ந்து ஊர் பொதுமக்களுக்கு மருத்துவ முகாமும் நடந்தது. தொடர்ந்து மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாடார் மக்கள் பேரவை மாநில கொள்கை பரப்பு செயலாளர் சுபாஷ் நாடார் செய்து இருந்தார். அவருடன் நிர்வாகிகள் நளன்குமார், விஷ்ணு குமார், பூபதி, ஜெனித், சதிஷ், ஜெயக்குமார், மார்த்தாண்டன் உள்பட பலர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விஸ்வநாதபுரம் மெயின் சாலையில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் லெவிஞ்சிபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மணிவர்ணபெருமாள் முன்னிலை வகித்தார். ஜெயராஜ் நாடார், செல்வன், ஜெனில், கார்த்திக் ராஜா, சுனேஷ், குமரன், வர்கீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story