காமராஜர் சிலைக்கு மரியாதை


காமராஜர் சிலைக்கு மரியாதை
x
தினத்தந்தி 16 July 2020 8:29 AM GMT (Updated: 2020-07-16T13:59:02+05:30)

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா, காமராஜரின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பனைக்குளம்,

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா தாமரைக்குளம் கிராமத்தில் மாவட்ட நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பத்ரகாளியம்மன் கோவிலில் பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து காமராஜரின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதில் நாடார் உறவின்முறை சங்கத்தின் தலைவர் சேதுபாலசிங்கம், பொதுச் செயலாளர் தங்கராஜ், பொருளாளர் தனசேகரன், ஆலோசகர்கள் சதாசிவம், அம்மமுத்து, நெடுஞ்சேரலாதன், துணை தலைவர் சிவசெல்வராஜ், இணை செயலாளர் பெரியண்ணன், துணை செயலாளர் காளிதாஸ், செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து பால சாத்தையா, சந்திரசேகரன், செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கீழக்கரை அருகே உள்ள சின்ன மாயாகுளம் நாடார் உறவின் முறை சங்கத்தின் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்தனர். இதில் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ஆபிரஹாம், கீழக்கரை நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லிங்கேஸ்வரி மற்றும் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் ஆணைக்கிணங்க காங்கிரஸ் கட்சியினர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டார பகுதியான தாமரைக்குளம் மற்றும் ரெட்டையூரணி பகுதியில் உள்ள காமராஜர் திரு உருவசிலைக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்கிருஷ்ணன். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மண்டபம் குகன் ராஜேந்திரன், முன்னாள் தலைவர் ரெத்தினம், ரெட்டையூரணி தலைவர் அசோகன், ராமசாமி, ஜோதிகுமார், பால்ச்சாமி, ராமசாமி ஆகியோர் தமிழக மீட்பு நாள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். விழா ஏற்பாடுகளை மண்டபம் வட்டார தலைவர் விஜயரூபன் செய்திருந்தார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் ஆலோசனையின்படி காமராஜரின் பிறந்த நாளையொட்டி மண்டபம் ஒன்றியம் இரட்டையூரணி மற்றும் தாமரைக்குளத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மண்டபம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ஜீவானந்தம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து கடுக்காய்வலசை, கோரவள்ளி, வெள்ளரிஓடை, நத்தகுளம், சேதுநகர் ஆகிய கிராமங்களில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ரவிசந்திரராமவன்னி, மாவட்ட தி.மு.க. பிரமுகர் தனுக்கோடி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் இரட்டையூரணி கணேசன், தாமரைக்குளம் களஞ்சியலட்சுமி, வெள்ளரிஓடை சந்திரசேகர், கோரவள்ளி கோகிலவாணி, வாலாந்தரவை பூர்ணவேல், ஒன்றியகவுன்சிலர்கள் சுகந்தி சோமசுந்தரம், பேச்சியம்மாள் ஜெயச்சந்திரன், ஊராட்சி கழக செயலாளர்கள் தாமரைக்குளம் சோமசுந்தரம், கோரவள்ளி கோவிந்தன், உச்சிப்புளி ரவிசந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story