பூந்தமல்லியில் துணிக்கடை ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா
பூந்தமல்லியில் துணிக்கடையில் பணிபுரியும் 50 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் கடை மூடப்பட்டது.
பூந்தமல்லி,
பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஒரு துணிக்கடையில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் கடையில் வேலை செய்யும் மேலும் 110 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த துணிக்கடையை பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள் மூடினார் கள். இந்த கடைக்கு பூந்தமல்லி, திருமழிசை, மாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இதனால் இந்த நாட்களில் வந்து சென்றவர்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டு, அவர் களை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் செயல் பட்டு வரும் வணிக வளாகங்கள் மற்றும் பெரிய அளவிலான கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பூந்தமல்லி நகராட்சியில் பகுதியில் நேற்று வரை 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 260 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்
வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்களில் சென்னை வந்தவர்களில் ஏற்கனவே 622 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் முகாமில் தங்கி இருந்தவர்களில் வளைகுடா நாடுகளில் இருந்து வந்த 8 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து வந்த 5 பேருக்கும், குவைத்தில் இருந்து வந்த 3 பேருக்கும், மலேசியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் என மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்தவர்களில் மேலும் 2 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்தது.
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் நேற்று 49 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 48 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 38 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 59 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
Related Tags :
Next Story