குடியாத்தம், குரிசிலாப்பட்டில் 3 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா


குடியாத்தம், குரிசிலாப்பட்டில் 3 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 July 2020 3:30 AM IST (Updated: 17 July 2020 7:22 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம், குரிசிலாப்பட்டில் 3 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

குடியாத்தம், 

குடியாத்தம் நகராட்சி மற்றும் கிராமங்களில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் 2 பேர், போக்குவரத்துப் போலீஸ் பிரிவில் பணியாற்றும் பெண் காவலர், போலீஸ் ஜீப் டிரைவர் எனக் காவல் துறையினர் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நெல்லூர்பேட்டையில் 55 வயது ஆண், 55 வயது பெண், தாழையாத்தத்தில் 50 வயது ஆண், காமாட்சிஅம்மன் பேட்டையில் 71 வயது மூதாட்டி, சந்தப்பேட்டையில் 61 வயது மூதாட்டி, 42 வயது ஆண், 9 வயது சிறுவன், 46 வயது ஆண், 16 வயது ஆண், 39 வயது ஆண், 57 வயது ஆண், பிச்சனூர் காளியம்மன்பட்டியில் 13 வயது ஆண், கங்காதர சாமி மடாலயத் தெருவில் 22 வயது ஆண், புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் 8 வயது சிறுமி, ராஜா கோவில் பகுதியில் 71 வயது ஆண், விநாயகபுரம் பகுதியில் 34 வயது பெண், கள்ளூரில் 32 வயது ஆண், சூராளூரில் 60 வயது ஆண், வேப்பூரில் 52 வயது ஆண், சேத்துவண்டையில் 22 வயது பெண் என மொத்தம் 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

திருப்பத்தூர் தாலுகா குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அங்கு பணிபுரிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். காவல் நிலையம் மூடி சீல் வைக்கப்பட்டது.

தற்காலிகமாக கந்திலி காவல் நிலையத்துக்கு குரிசிலாப்பட்டு காவல் நிலையம் மாற்றப்பட்டது. காவல் நிலையம் அருகே உள்ள அனைத்து இடங்களும் கிருமி நாசினி தெளித்து, பிளச்சிங் பவுடர் தூவப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் தங்கியிருந்த திருப்பத்தூர் தாலுகா காவல் நிலைய குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

கே.வி.குப்பம் தாலுகாவில் ஏற்கனவே 128 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று லத்தேரி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை, 2 வயது ஆண் குழந்தை, 34 வயது பெண், லப்பை கிருஷ்ணாபுரம் மசூதி தெருவைச் சேர்ந்த 70 வயது பெண் ஆகிய 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்று 132 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 82 பேர் சிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Next Story