அணியாப்பூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
அணியாப்பூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வையம்பட்டி,
திருச்சி மாவட்டம் அணியாப்பூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில், காமராஜரின் பிறந்தநாள் விழா டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நற்பணி மன்ற கவுரவ ஆலோசகர் பாப்புக்காளை நாடார் தலைமையில் நடைபெற்றது.
கவுரவ தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். உலக நன்மைக்காகவும், கொரோனா பாதிப்பு நீங்கி மக்கள் நீடூழி வாழ வேண்டியும் பத்ரகாளியம்மன் கோவிலில் அணியாப்பூர் ஊராட்சி மன்றத் தலைவரும், ஜமீன்தாருமான அசோக்குமார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால், நாடார் மகாஜன சங்க ஆயுட்கால உறுப்பினர் மாமுண்டி லெக்கையன், திருச்சி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொது செயலாளர் செந்தில்தீபக், லலிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர்.
மேலும், தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மரக்கன்றுகளும் நடப்பட்டது. முடிவில் நற்பணி மன்ற துணைச் செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.விழாவில், நாடார் சங்க தலைவர் தங்கவேல், செயலாளர் பால்ராஜ், நற்பணி மன்ற பொருளாளர் தியாகராஜன், காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகிகள் காமராஜ், தங்கராஜா, சந்தைப்பேட்டை நற்பணி மன்ற செயலாளர் காமராஜ், திருச்சி மாவட்ட சி.பா.ஆதித்தனார் சமூக நலப் பேரவைதலைவர் ரவி நாடார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story