மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் கேட்டு டிரைவர்கள் உண்ணாவிரதம்
மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் கேட்டு டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாவட்ட டி.என். ஆல் டிரைவர்ஸ் அசாசியேஷன் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் டிரைவர்களுக்கு தனி நல வாரியம் அரசு அமைத்து தர வேண்டும். கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் டிரைவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் துணை தலைவர் சேகர், பொருளாளர் ஜெயபால், ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், செய்தி தொடர்பாளர் ரெங்கநாதன் உள்ளிட்ட டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ரெயில்வே தனியார் மயமாக்கும் முடிவினை மத்திய அரச கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Tags :
Next Story