திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்


திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 July 2020 10:25 AM IST (Updated: 17 July 2020 10:25 AM IST)
t-max-icont-min-icon

திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்.

பார்வதிபுரம்,

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தி.க. தலைவர் கி.வீரமணியின் அறிவுறுத்தலின்படி குமரி மாவட்ட தி.க. சார்பில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கட்டையன்விளையில் பொதுக்குழு உறுப்பினர் தயாளன், சிறீவள்ளி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல், வெள்ளமடம் கிருஸ்துநகரில் மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன், சுசீந்திரம் நல்லூரில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், இரணியலில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவதாணு, நாகர்கோவில் மேற்கு லுத்ரன் தெருவில் பிரதீஷ், கோட்டாரில் இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் அணி செயலாளர் கருணாநிதி, ஆஷிக், பொன்.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story