கடலூரில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


கடலூரில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 July 2020 11:55 AM IST (Updated: 17 July 2020 11:55 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர்,

கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து, கறுப்பர் கூட்டம் ‘யூடியுப்’ சேனலில் அவதூறான வீடியோ பதிவு ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், கந்தசஷ்டி கவசம் பாடலை விமர்சித்து, தவறான தகவல் பதிவிடப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக சென்னை வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறு கருத்து பதிவிட காரணமாக இருந்த முக்கிய நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் எனவும், கறுப்பர் கூட்டம் ‘யூடியுப்’ சேனலை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ் தலைமையில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர தலைவர் வேலு வெங்கடேசன், நிர்வாகிகள் குமார் தாமோதரன், எஸ்.கே.பாலசேகர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story