மாவட்ட செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 90.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி + "||" + In Dharmapuri district 90.80 percent students have passed the Plus-2 examination

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 90.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 90.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட 1.18 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து உள்ளது.
தர்மபுரி,

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில் பொதுத்தேர்வை 167 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 18,042 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இவர்களில் 16,383 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 90.80 ஆகும்.


பிளஸ்-தேர்வை எழுதிய 8,786 மாணவர்களில் 7,809 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.88 ஆகும். இதேபோல் பிளஸ்-2 தேர்வை எழுதிய 9,256 மாணவிகளில் 8,574 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 92.63 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 3.75 சதவீத அளவில் கூடுதல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 89.62 ஆக இருந்தது. இந்த ஆண்டு 90.80 சதவீதமாக ஆக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 1.18 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பிளஸ்-2 தேர்ச்சியில் கடந்த ஆண்டு 25-ம் இடத்தில் இருந்த தர்மபுரி மாவட்டம் இந்த ஆண்டு 23-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 முதியவர்கள் சாவு
தர்மபுரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 முதியவர்கள் நேற்று உயிரிழந்தனர்.
2. சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.65 சதவீதம் தேர்ச்சி - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
3. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பயன் பெறும் எண்ணேகொள்புதூர் கால்வாய் திட்டத்துக்கு ரூ.50 கோடி நிதி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பயன் பெறும் எண்ணேகொள்புதூர் கால்வாய் திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
4. தர்மபுரி, கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தர்மபுரி, கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
5. தர்மபுரியில் கொரோனாவுக்கு வெங்காய வியாபாரி பலி: உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு
தர்மபுரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெங்காய வியாபாரி பலியானார். அவருடைய உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...