நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா
நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரத்தில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் நேரு பூங்காவில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவுக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக்நவீத் தலைமை தாங்கினார். நகர துணை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ரவி, நகர செயலாளர் குப்புசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாகீர்பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் தமிழக மீட்புநாள் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
இதேபோல் நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட தலைவர் கோஸ்டல் இளங்கோ தலைமை தாங்கி, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி, நகர தலைவர் சக்தி வெங்கடேஷ், மாவட்ட துணை தலைவர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் தலைமையில் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நாமக்கல் ஒன்றிய செயலாளர் கவுதமன், நகர செயலாளர் வணங்காமுடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள ராஜீவ்காந்தி திடலில் காமராஜர் பிறந்த தினவிழா நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர தலைவர் ராஜா, துணை தலைவர் திலகர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் நவநீதம், தொழில்முனைவோர் காங்கிரஸ் உறுப்பினர் ஸ்ரீவிக்னேஸ்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்
ராசிபுரம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா ராசிபுரம் காந்தி மாளிகையில் கொண்டாடப்பட்டது. காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமுலு முரளி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் பாச்சல் சீனிவாசன், சண்முகம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் ராமசாமி, ஜெயபால், கோவிந்தராஜ், டி.ஆர்.சண்முகம், பிரகஸ்பதி, பழனிசாமி, ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய காங்கிரஸ் சார்பில் நாமகிரிப்பேட்டை இந்திராகாந்தி சிலை அருகில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது. வட்டார தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். நாமகிரிப்பேட்டை பேரூர் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார துணைத் தலைவர் சவுந்திரராஜன், நாமகிரிப்பேட்டை நகர முன்னாள் தலைவர் முருகேசன், எஸ்.சி.எஸ்.டி. வட்டார தலைவர் சுப்பிரமணி, வ.மு.பாளையம் கிராம கமிட்டி தலைவர் சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Related Tags :
Next Story