சேரன்மாதேவியில் மதிப்பெண் குறைந்ததால் விபரீதம்: பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


சேரன்மாதேவியில் மதிப்பெண் குறைந்ததால் விபரீதம்: பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 July 2020 10:15 PM GMT (Updated: 2020-07-18T06:40:53+05:30)

சேரன்மாதேவியில் மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேரன்மாதேவி,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி கீழ முதல் தெருவை சேர்ந்தவர் சபரிமாலை. இவருடைய மகன் பரத்ராஜ் (வயது 17). இவர் சேரன்மாதேவியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதி இருந்தார்.

நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பரத்ராஜின் மதிப்பெண்கள் குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பரத்ராஜ் சோகத்தில் இருந்துள்ளார்.

நேற்று அவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த பரத்ராஜ், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்ததும் அவரது பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர். மகன் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து சேரன்மாதேவி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மதிப்பெண் குறைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story