மரம் வளர்ப்பு குறித்து கட்டுரை எழுதிய கொடைக்கானல் மாணவருக்கு பிரதமர் கடிதம்


மரம் வளர்ப்பு குறித்து கட்டுரை எழுதிய கொடைக்கானல் மாணவருக்கு பிரதமர் கடிதம்
x
தினத்தந்தி 18 July 2020 6:53 AM IST (Updated: 18 July 2020 6:53 AM IST)
t-max-icont-min-icon

மரம் வளர்ப்பு குறித்து கட்டுரை எழுதிய கொடைக்கானல் மாணவருக்கு பிரதமர் கடிதம்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் லாயிட்ஸ் ரோட்டை சேர்ந்தவர் பிரசன்னன். இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் இவர், வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் குறித்த கட்டுரை போட்டியில் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து எழுதிய கட்டுரை அனைவருடைய பாராட்டையும் பெற்றது.

‘மரத்துக்கு மனிதன் தேவையில்லை, மனிதனுக்கு தான் மரம் தேவை’ என்ற கருத்தை வலியுறுத்தினார். இதேபோல் ஒவ்வொரு மாணவரும் பள்ளியில் சேரும்போதும், பள்ளிப்படிப்பை நிறைவு செய்யும்போதும் ஒரு மரக்கன்றை நடவு செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கருத்தை கட்டுரையில் கூறியுள்ளார்.

இந்த கருத்தை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு பிரசன்னன் கடிதம் எழுதினார். இந்தநிலையில் மாணவரின் கருத்தை வரவேற்று பரிசீலிப்பதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் கடிதம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story