தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக ஒரே நாளில் அதிகபட்சமாக 117 பேருக்கு கொரோனா
தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக ஒரே நாளில் அதிகபட்சமாக 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 வயது பெண் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் மார்க்கெட் தொடர்புடையவர்கள் மூலம் தற்போது தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை கொரோனாவால் 835 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று கும்பகோணத்தை சேர்ந்த 1 வயது பெண் குழந்தைக்கும், கும்பகோணம் நகரம் மற்றும் ஊரக பகுதிகளை சேர்ந்த 87 பேருக்கும், தஞ்சையை சேர்ந்த 13 பேருக்கும், பட்டுக்கோட்டையை சேர்ந்த 8 பேருக்கும், திருவையாறு, திருப்பூந்துருத்தி, வல்லம் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
952 ஆக அதிகரிப்பு
தஞ்சை மாவட்டத்தில் இதற்கு முன்பு அதிகபட்சமாக ஒரே நாளில் 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக அதிகபட்சமாக 117 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 952 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் நேற்று குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 486 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 453 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்றுக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர்.

Related Tags :
Next Story