கைத்தறி நெசவாளர்கள் ஊரடங்கு கால நிவாரணம் பெற இன்று கடைசி நாள் அதிகாரி தகவல்


கைத்தறி நெசவாளர்கள் ஊரடங்கு கால நிவாரணம் பெற இன்று கடைசி நாள் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 18 July 2020 7:46 AM IST (Updated: 18 July 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குனர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

காஞ்சீபுரம்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஆணையின் அடிப்படையில் கைத்தறி நெசவாளர் நலவாரியத்தில் பதிவு பெறாமலும், 200 யூனிட்டுகள் மின்சாரத்தை விலையில்லாமல் பெற்று பயன் பெறும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஊரடங்கு கால நிவாரண தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அரசாணையில் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்ட 6 ஆயிரத்து 737 தகுதியுள்ள நெசவாளர்களில் 500 பேருக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.

அவர்கள் வங்கி கணக்கு விவரம் மற்றும் விலையில்லா மின்சாரம் பெறும் அத்தாட்சியுடன் கூடிய விண்ணப்பங்களை காஞ்சீபுரம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர், காமாட்சி அம்மன் காலனி, காஞ்சீபுரம் என்ற முகவரிக்கு இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட விவரங்கள் இன்றைக்குள் கிடைக்காத பட்சத்தில் மீதமுள்ள தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story