திருவள்ளூர் அருகே கொத்தனார் கொலை வழக்கில் 2 பேர் கைது
திருவள்ளூர் அருகே கொத்தனார் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருத்தணி,
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு கிராமத்தில் கன்னியம்மன் கோவில் குளத்தில் நேற்று முன்தினம் ஆண் பிணம் கிடந்தது. தலையில் 2 இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் திருவாலங்காடு போலீசில் புகார் செய்தனர்.
அவரது சாவில் மர்மம் இருப்பதை தெரிந்த திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், சேகர், முருகன் ஆகியோருடன் கூடிய சிறப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் இறந்த நபர் திருவள்ளூரை அடுத்த பழையனூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 35) என்பதும் அவர் கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
கொலை தொடர்பாக திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர் பாளையக்கார தெருவை சேர்ந்த கஜேந்திரன் (21), அவரது நண்பரான திருவாலங்காடு வடக்கு மாட வீதியை சேர்ந்த ஜானகிராமன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கஜேந்திரன் அளித்த வாக்குமூலம் வருமாறு.
நான் பழையனூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். கடந்த 10 நாட்களுக்கு முன்பு எங்கள் ஊருக்கு வெங்கடேசன் வீடு கட்டுமான பணிக்காக வந்தார். கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அங்கு வந்த எனது தாயாரை வெங்கடேசன் தகாத வார்த்தைகளால் பேசினார். இதை அறிந்த நான் அவரை தட்டி கேட்டேன். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்தவர்கள் எங்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
நேற்று முன்தினம் நானும் எனது நண்பரான ஜானகிராமனும் திருவாலங்காடு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தோம். எதிரே வெங்கடேசன் வந்து கொண்டிருந்தார். என்னுடைய தாயாரை தகாத வார்த்தையால் பேசிய அவரை சும்மா விடக்கூடாது என்று கூறி நான் வைத்திருந்த கத்தியால் அவரது தலையில் குத்தினேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதைத்தொடர்ந்து அவரது உடலை அருகில் உள்ள கோவில் குளத்தில் வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் சென்று விட்டோம். இருப்பினும் போலீசார் எங்களை எப்படியோ கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து திருவாலங்காடு போலீசார் கஜேந்திரன், ஜானகிராமன் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story