தீப்பெட்டி பண்டல்களுடன் சாத்தூரில் இருந்து சென்ற லாரி கவிழ்ந்தது


தீப்பெட்டி பண்டல்களுடன் சாத்தூரில் இருந்து சென்ற லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 18 July 2020 10:10 AM IST (Updated: 18 July 2020 10:10 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தீப்பெட்டி பண்டல்களுடன் சாத்தூரில் இருந்து சென்ற லாரி கவிழ்ந்தது.

வேடசந்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து, குஜராத் மாநிலம் சூரத்துக்கு தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை, திருச்சியை சேர்ந்த முத்துசாமி என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவராக நாமக்கல்லை சேர்ந்த மாதேஸ்வரன் (49) உடன் இருந்தார்.

திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே உள்ள விட்டல்நாயக்கன்பட்டி என்னுமிடத்தில் நேற்று அதிகாலை லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர்கள் முத்துசாமி, மாதேஸ்வரன் ஆகியோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story