திருச்செங்கோட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா
திருச்செங்கோட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு சான்றோர்குல நாடார் சங்கம் மற்றும் திருமண மண்டபம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்செங்கோடு நாடார் திருமண மண்டப வளாகத்தில் உள்ள காமராஜர் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நாடார் திருமண மண்டப செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் மதியழகன், துணைத் தலைவர்கள் குழந்தைவேல், நடேசன், இளங்கோவன், துணைச் செயலாளர்கள் வெங்கடேஷ், ராஜவேல், சரவணன், வக்கீல்கள் வேல்முருகன், முருகேசன், மற்றும் உறுப்பினர்கள் பாக்கியநாதன், துரைசாமி, பழனிசாமி, மேலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு புது பஸ் நிலையம் காமராஜர் சிலை முன்பு கொங்குநாடு சான்றோர்குல நாடார் முன்னேற்ற சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சங்கத்தின் நிறுவன தலைவர் உதயா வெங்கடேஸ், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து மாநில செயலாளர் தேவராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் சிலம்பரசன், மாவட்ட பொறுப்பாளர் கோபி பாலன், மாவட்ட செயலாளர் தனசேகர், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பழனிசாமி, வசந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Tags :
Next Story