மாவட்ட செய்திகள்

சாணார்பட்டி அருகே மயில் வேட்டையாடிய 2 பேர் கைது துப்பாக்கிகள் பறிமுதல் + "||" + Two arrested for peacock poaching near Sanarpatti

சாணார்பட்டி அருகே மயில் வேட்டையாடிய 2 பேர் கைது துப்பாக்கிகள் பறிமுதல்

சாணார்பட்டி அருகே மயில் வேட்டையாடிய 2 பேர் கைது துப்பாக்கிகள் பறிமுதல்
சாணார்பட்டி அருகே மயில் வேட்டையாடிய 2 பேர் கைது துப்பாக்கிகள் பறிமுதல்.
கோபால்பட்டி,

சாணார்பட்டி அருகே உள்ள விராலிபட்டியை சேர்ந்தவர்கள் ஞானசேகர் (வயது 50), பவுல்ராஜ் (36). கூலித்தொழிலாளிகள். நேற்று இரவு இவர்கள், தங்களது வீட்டின் அருகே சுற்றித்திரிந்த ஒரு மயிலை துப்பாக்கி (ஏர்கன்) மூலம் சுட்டுக்கொன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமலை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.


பின்னர் அங்கு மயில் இறைச்சியை சமைப்பதற்காக தயார் செய்து கொண்டிருந்த ஞானசேகர், பவுல்ராஜ் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ மயில் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மயில் வேட்டைக்கு பயன்படுத்திய 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பேட்டையில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது
பேட்டையில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. காஷ்மீரில் டிரோன்கள் உதவியுடன் பயங்கரவாதிகள் வீசி சென்ற ஆயுதங்கள்; போலீசார் பறிமுதல்
காஷ்மீரில் டிரோன்கள் உதவியுடன் பயங்கரவாதிகள் வீசி சென்ற ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
3. கர்நாடகத்தில் இருந்து நெல்லைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.37½ லட்சம் கஞ்சா, குட்கா பறிமுதல் 2 பேர் கைது
கர்நாடகத்தில் இருந்து நெல்லைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.37½ லட்சம் மதிப்புள்ள கஞ்சா, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் இருந்து பெண்கள் உள்ளாடை பார்சலில் மறைத்து ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
5. கோபியில் உர விற்பனையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை ரூ.4 கோடி- ஆவணங்கள் பறிமுதல்
கோபியில் உர விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் நடத்திய திடீர் சோதனையில் ரூ.4 கோடி மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...