ஆற்றில் மூழ்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி அமைச்சர் வழங்கினார்


ஆற்றில் மூழ்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 19 July 2020 9:27 AM IST (Updated: 19 July 2020 9:27 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றில் மூழ்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

அய்யம்பேட்டை,

அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி ஹவ்வா நகரை சேர்ந்த அப்துல் நிசார்(வயது 19), அவரது நண்பர் இமாம் சாதிக்(19) ஆகிய 2 பேரும் சம்பவத்தன்று சரபோஜிராஜபுரம் குடமுருட்டி ஆற்றின் தடுப்பணை பகுதிக்கு குளிக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி இறந்தனர். தகவலறிந்த அமைச்சர் துரைக்கண்ணு, இறந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கினார். அவருடன் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபிநாதன், பாபநாசம் ஒன்றியக்குழு துணை தலைவர் தியாக. பழனிச்சாமி, நகர செயலாளர் முருகன், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முத்து, சதீஷ், முகமது இப்ராகிம், அ.தி.மு.க. நிர்வாகிகள் சேக் அலாவுதீன், அஜ்ஜி ஆகியோர் உடன் சென்றனர்.

Next Story