கோவில்கள் திறக்க அனுமதி இல்லை வீடுகளிலேயே அம்மனுக்கு கூழ் வார்த்து பூஜை


கோவில்கள் திறக்க அனுமதி இல்லை வீடுகளிலேயே அம்மனுக்கு கூழ் வார்த்து பூஜை
x
தினத்தந்தி 20 July 2020 5:00 AM IST (Updated: 20 July 2020 3:42 AM IST)
t-max-icont-min-icon

கோவில்கள் திறக்க அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் தங்களுடைய வீடுகளிலேயே அம்மனுக்கு கூழ் வார்த்து பூஜை செய்து வருகிறார்கள்.

சென்னை,

ஆடி மாதத்தில் திரும்பும் திசை எங்கிலும் உள்ள அம்மன் கோவில்களில் இருந்து பக்தி மனம் வீசும் தெய்வீக பாடல்கள் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும். அம்மனுக்கு கூழ் வார்க்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். பால் குடம் எடுத்தும், தீச்சட்டி எடுத்தும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்தி கடன்களை அம்மனுக்கு செலுத்துவார்கள்.

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் மத வழிபாட்டு தலங்கள் திறப்பதற்கு அரசு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் உள்ள வழிபாட்டு தலங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஆடி மாதத்தில் கோவில்களில் செய்யவேண்டிய வழிபாட்டு முறைகளை மக்கள் தங்கள் வீடுகளில் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சென்னை பெரம்பூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், அசோக்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அம்மன் வழிபாட்டு முறைகளை கடைபிடிப்பவர்கள் கூழ் தயாரித்து, தங்கள் வீட்டில் உள்ள அம்மன் படத்தின் முன்பு படைத்து பக்தர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். கூழ் உடன் சுவையான கருவாட்டு குழம்பு, முருங்கைக்கீரை கூட்டு வழங்குகிறார்கள்.

Next Story