அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தூக்குப்போட்டு தற்கொலை திருப்பூரில் சோக சம்பவம்
திருப்பூரில் அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் சிறுபூலுவப்பட்டியை அடுத்த பெரியகாடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் அதே பகுதியில் அழகேந்திரா எக்ஸ்போர்ட்ஸ் என்ற பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகள் மணிமேகலை (வயது 29). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் அந்த பகுதியிலேயே வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மணிமேகலையின் அண்ணன் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்ற போது கார் விபத்தில் உயிரிழந்தார். இதன் பின்னர் மணிமேகலை, அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் கடுமையான மனஉளைச்சலுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற மணிமேகலை நேற்று வீட்டில் அவருடைய அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் மகள் அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story