திருப்பூரில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி: போக்குவரத்து மாற்றம் குறித்து போலீஸ் கமிஷனர் ஆய்வு
திருப்பூரில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி தொடங்க உள்ளதால் போக்குவரத்து மாற்றம் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதியாக புஷ்பா ரவுண்டானா சந்திப்பு உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருப்பூரில் பலத்த மழை பெய்யும் போது பி.என்.ரோடு, மில்லர் பஸ் நிறுத்தம், அவினாசி ரோடு, பங்களா பஸ்நிறுத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் குளம் போல் தேங்கும். இதனால் அப்பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
கழிவுநீர் கால்வாய்
இந்த நிலையில் இங்கு மழைநீர் வடிந்து செல்லும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க மாவட்ட நிர்வாகம் மூலம் முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி புஷ்பா ரவுண்டானா அம்மா மருந்தகம் முதல் தேவாங்கபுரம் பள்ளி வரை சாலையின் குறுக்கே 39 மீட்டர் அளவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளன.
இந்த கால்வாய் அமைக்கும் பணி தொடங்கும் பட்சத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து நேற்று ஆய்வு பணி நடைபெற்றது. மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
போக்குவரத்து மாற்றம்
மேலும் அந்த பகுதியில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து மாற்றம் குறித்து போலீசாருக்கு அறிவுரை வழங்கினர். இந்த கழிவுநீர் கால்வாய் பணிகள் முடிவடைந்த பின் அப்பகுதியில் பாதசாரிகள் சாலையைக் கடக்க நடைமேம்பாலம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story