முழு ஊரடங்கு நாளில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்


முழு ஊரடங்கு நாளில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 20 July 2020 4:04 AM GMT (Updated: 20 July 2020 4:04 AM GMT)

தமிழகத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

தமிழகத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 3-வது வாரமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த நாளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருப்பதாலும், மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதாலும் சாலையோரங்களில், தெருவோரங்களில், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் ஆதரவற்ற நிலையில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்ட நாகர்கோவில் கோட்டார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தனது சொந்த செலவில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலைய சாலை ஆகியவற்றில் தங்கியிருந்த சுமார் 100 ஆதரவற்றவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பிச்சைக்காரர்களுக்கு மதியம் உணவுப் பொட்டலங்களை வழங்கினார். அவருடன் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் ஆகியோரும் கலந்து கொண்டனர். இன்ஸ்பெக்டரின் இந்த மனிதாபிமான செயலை அனைவரும் பாராட்டினார்கள்.

Next Story