முழு ஊரடங்கு உத்தரவு அமல்: மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் நேற்று மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தது.
கடலூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அரசு, தனியார் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெயில் சேவையும் முடங்கி உள்ளது. இருப்பினும் நிபந்தனைகளுடன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அதில் பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பொருட்களை வாங்கி சென்று வருகின்றனர்.
சில தொழில் நிறுவனங்களும் நிபந்தனைகளுடன் இயங்கி வருகிறது. அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இருந்த போதிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஜூலை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அரசு உத்தரவிட்டது. இதன்படி கடந்த 5, 12-ந் தேதிகளில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
கடைகள் அடைப்பு
இதேபோல் 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. கடலூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் லாரன்ஸ் ரோடு, இம்பீரியல் ரோடு, பாரதி சாலை, பீச் ரோடு, செம்மண்டலம் சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மற்ற சாலைகளிலும் ஆட்கள் நடமாட்டம் இல்லை. கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்ததை பார்க்க முடிந்தது. மருந்து, பால் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. திருப்பாதிரிப்புலியூரில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் அடைக்கப்பட்டன.
காய்கறி மார்க்கெட் மூடப்பட்டன
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட், கோ-ஆப்டெக்ஸ் எதிரே செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட், முதுநகரில் உள்ள மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டன. வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. குறிப்பிட்ட சிலர் மட்டும் அத்தியாவசிய தேவைக் காக வாகனங்களில் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் உரிய அனுமதி சீட்டை காண்பித்தவுடன் அவர்களை போலீசார் விட்டனர். அனுமதியின்றி வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி என மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Related Tags :
Next Story