கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 700 படுக்கைகள் தயார் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 700 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தூத்துக்குடி அண்ணா நகர் 10-வது தெரு தங்கம் பள்ளி, புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில் நேற்று சளி மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடந்தன. இதனை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள அனைவருக்கும் சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாநகர நல அலுவலர் அருண்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 7 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்து வந்தது. தற்போது கூடுதலாக 5 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடக்கிறது.
கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள இடத்தின் அருகே இதுபோன்ற சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 5 நோய் கட்டுபாட்டு பகுதியில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு சளி மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு குழுவினர் மூலம் 100 நபர்கள் தாமாக முன் வந்து வீடு வீடாக சென்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள தெரிவித்து இருந்தார்கள். இவர்கள் மூலம் சுமார் 100 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அடுத்த 2 நாட்கள் எந்த ஒரு நபரும் விடுபடாத வகையில் சளி மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. ஒரு பகுதியில் 2 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் இந்த பகுதி நோய் கட்டுபாட்டு பகுதி வளையத்தில் கொண்டு வரப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 700 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. கூடுதலாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 200 படுக்கைகளும், கோவில்பட்டி நகராட்சி பகுதியில் 100 படுக்கைகளும், திருச்செந்தூர் பகுதியில் 150 படுக்கைகளும் தயார் செய்வதற்கு பணிகள் நடந்து வருகிறது. தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். தாமாக மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் நோயாளிகளுக்கு அளிக்க போதுமான அளவு இருப்பில் உள்ளது. விளாத்திக்குளம், கோவில்பட்டி, உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் சுழற்சி முறையில் வியாபாரிகளுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சுமார் 52 ஆயிரம் பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. தினம்தோறும் 1,300 முதல் 1,400 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. அடுத்த ஒரு வாரத்தில் இதனை தினசரி 2 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story