ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்துக்கு தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி
ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்துக்கு தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி.
கோபால்பட்டி,
சாணார்பட்டி ஒன்றியம், ஆவிளிபட்டி ஊராட்சிமன்ற தலைவராக இருந்தவர் பெரியசாமி (வயது 37). இவர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து ஆவிளிபட்டியில் உள்ள பெரியசாமியின் குடும்பத்தினரை நத்தம் தொகுதி எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், மாவட்ட கவுன்சிலருமான விஜயன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க. சார்பில் குடும்பநல நிதியாக ரூ.1 லட்சம் வழங்கினர். அப்போது சாணார்பட்டி ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள், சாணார்பட்டி தி.மு.க. ஒன்றிய செயலாளர் தர்மராஜன், மோகன், மாவட்ட கவுன்சிலர் லலிதா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமதாஸ், தி.மு.க. மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பாப்பாத்தி, ஆவிளிபட்டி ஒன்றியக்குழு உறுப்பினர் பார்வதி, ஆவிளிபட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story