மாவட்ட செய்திகள்

புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள், தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் + "||" + Young people who have migrated and returned home can apply for a business loan

புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள், தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள், தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.
கடலூர்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமான ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் ஆகிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம், பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி மற்றும் குமராட்சி ஆகிய 6 வட்டாரங்களில் 280 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் திட்ட ஊராட்சிகளில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட முழு முடக்கத்தால், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர் குடும்பங்களை சேர்ந்த புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் ரூ.1 லட்சம் வரை நீண்ட கால கடனாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

இந்த நிதியை பெற புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களும், பெண்கள் என்றால் 18 வயது முதல் 40 வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்நிதியை பெற பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம், பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி மற்றும் குமராட்சி வட்டாரங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் புதுப்பாளையம் இரட்டைபிள்ளையார்கோவில் தெருவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தை நேரிலும், 04142-210185 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடன் தவணை திருப்பி செலுத்த அவகாசம்: சிறு தொழிற்துறையினரிடம் கூடுதல் வட்டி வசூலிக்க கூடாது
சிறு தொழிற்துறையினர் கடன் தவணை திருப்பி செலுத்த அவகாசம் அளிக்க வேண்டும். மேலும் கூடுதல் வட்டி வசூலிக்க கூடாது என்று கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கூறினார்.
2. 1,941 பயனாளிகளுக்கு இருசக்கர வாகன மானியம் ஒதுக்கீடு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
வேலூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் 1,941 பயனாளிகளுக்கு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
3. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் 15-ந்தேதி கடைசி நாள்
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 15-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
4. ஆதிதிராவிட விவசாயிகள் சூரியசக்தி பம்புசெட்டுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிட விவசாயிகள் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
5. தொழிற்பயிற்சி மையங்களில் நாளை முதல் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி மையங்களில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...