மாவட்ட செய்திகள்

பட்டிவீரன்பட்டி அருகே, மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி + "||" + Near Pattiviranapatti, a woman fell off a motorcycle and died

பட்டிவீரன்பட்டி அருகே, மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

பட்டிவீரன்பட்டி அருகே, மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
பட்டிவீரன்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
பட்டிவீரன்பட்டி,

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் அயூப்கான். இவரது மனைவி நஜீமாபீவி(வயது 45). இவர்களது மகன் நஜீப்ரகுமான். நேற்று செம்பட்டி அருகேயுள்ள சித்தையன்கோட்டையில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்விற்காக உத்தமபாளையத்திலிருந்து நஜீமாபீவி, அவரது மகன் நஜீப்ரகுமான் ஆகியோர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். மோட்டார்சைக்கிளை நஜீப்ரகுமான் ஓட்டினார்.

பின்னர் அவர்கள் சித்தையன்கோட்டையில் நடந்த துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு உத்தமபாளையத்துக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். வழியில் பட்டிவீரன்பட்டி அருகே லட்சுமிபுரம் சுங்கசாவடியில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் ஏறியபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நஜீமாபீவி திடீரென நிலைதடுமாறி கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே நஜீமாபீவி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது: தனியார் பள்ளி ஆசிரியர் சாவு - மன்னார்குடி அருகே பரிதாபம்
மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தனியார் பள்ளி ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
2. உடுமலை அருகே மின்வேலியில் சிக்கி பெண் பலி
உடுமலை அருகே மின்வேலியில் சிக்கி பெண் பலியானார்.
3. நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி விபத்து: மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த இளம்பெண் பலி
பெரியபாளையம் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைத்தடுமாறியதில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் கணவர் கண் முன் பரிதாபமாக பலியானார்.
4. சின்னசேலம் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
5. திண்டிவனம் அருகே பயங்கர விபத்து சாலையோர மரத்தில் கார் மோதல்: இரும்பு கடை அதிபர் உள்பட 6 பேர் பலி
திண்டிவனம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் இரும்பு கடை அதிபர் உள்பட 6 பேர் பலியானார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை