செங்கோட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை


செங்கோட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 23 July 2020 3:45 AM IST (Updated: 23 July 2020 12:49 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டனர்.

செங்கோட்டை,

செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடந்து வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், கொரோனா காலம் முடியும் வரை நிவாரணம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.3000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கோட்டை தாலுகா குழு சார்பில் இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பாலுச்சாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர்கள் வேலுமயில், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கணபதி, தாலுகா தலைவர் சின்னச்சாமி ஆகியோர் பேசினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பால்ராஜ், நகரச்செயலாளர் முருகன், கற்குடி கிளைச்செயலாளர் முருகன், சி.ஐ.டி.யு. கட்டுமான சங்க நிர்வாகி கசமுத்து, வட்டாரக்குழு உறுப்பினர் ரெயில்வே முத்துசாமி. சி.ஐ.டி.யு. தாலுகா செயலாளர் மாரியப்பன், வட்டாரத்தலைவர் வன்னியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story