விழுப்புரம் மாவட்டத்தில் 14 இடங்களில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரம் மாவட்டத்தில் 14 இடங்களில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 July 2020 3:45 AM IST (Updated: 23 July 2020 9:28 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தை இழிவுப்படுத்தியதை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் 14 இடங்களில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தை இழிவுப்படுத்தியதோடு, கட்சியின் மூத்த தலைவர்களான நல்லக்கண்ணு, சுந்தரவள்ளி ஆகியோரை இழிவுப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடும் சங்பரிவார் கும்பலின் அவதூறுகளை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் விழுப்புரத்தில் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட அலுவலகம் முன்பு அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், நிதானம், காணை ஒன்றிய செயலாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் கண்டமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமையிலும், மடப்பட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் குமார் தலைமையிலும், அரசூர் கூட்டுசாலையில் ஒன்றிய செயலாளர் நாராயணன் தலைமையிலும், திருவெண்ணெய்நல்லூர் கடை வீதியில் நகர செயலாளர் முருகன் தலைமையிலும், சரவணப்பாக்கத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கோதண்டபாணி தலைமையிலும், அரகண்டநல்லூரில் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையிலும், திண்டிவனத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் இன்பஒளி தலைமையிலும், கூட்டேரிப்பட்டில் கிளை செயலாளர் அய்யாவு தலைமையிலும், செண்டூரில் கிளை செயலாளர் பாலமுருகன் தலைமையிலும், ஒட்டர்பாளையத்தில் கிளை செயலாளர் தனகோட்டி தலைமையிலும், பெரியதச்சூரில் கிளை செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும், கோட்டக்குப்பத்தில் வட்டக்குழு உறுப்பினர் இஸ்மாயில் தலைமையிலும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் வட்ட செயலாளர் தனுசு தலைமையிலும் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகவேல், ரவி, திருமூர்த்தி, ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளர் சையத்கரீம் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்டக்குழு சசிகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் தலித்சந்திரன், சிந்தனைவளவன், நகர செயலாளர் ஜானகிராமன், தந்தைபெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் இளையராஜா, எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொறுப்பாளர் முகமதுரபி, மற்றும் தேவேந்திரன், பாஸ்கர், சிவாஜி, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பகண்டை கூட்டுச்சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சங்கராபுரம் வட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் வட்டக் குழு உறுப்பினர்கள் ஏழுமலை, பவானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்டக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், பூமாலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர் ஜெயபாலன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பிரபு, தி.க. ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story