தலைவர்கள் குறித்து சமூகவலைத்தளத்தில் அவதூறு: கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கலில் தலைவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திண்டுக்கல்,
சென்னையில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சந்தானம், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் மற்றும் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் பழனி மயில் ரவுண்டானா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகரசபை தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பழனி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். வேடசந்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பிச்சைஇஸ்மாயில் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முனியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நத்தம் பஸ் நிலையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சின்னக்கருப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story