திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை ஆடிப்பூர விழா கொடியேற்றம் - ஆன்லைனில் ஒளிபரப்ப ஏற்பாடு


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை ஆடிப்பூர விழா கொடியேற்றம் - ஆன்லைனில் ஒளிபரப்ப ஏற்பாடு
x
தினத்தந்தி 23 July 2020 8:45 AM GMT (Updated: 23 July 2020 8:28 AM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம் நாளை நடக்கிறது. இதனை ஆன்லைனில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் ஆகும். நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலம் என்று போற்றப்படும் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் நடைபெறும்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிலுக்கு சிவாச்சாரியார்கள் சென்று வழக்கமான வழிபாடுகளை செய்து வருகின்றனர்.

ஆடிப்பூர விழா கொடியேற்றம்

இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) விநாயகர் வழிபாடு, யாகசாலை பூஜை நடக்கிறது. அம்மன் சன்னதியில் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து 10 நாட்கள் விழா சிறப்பு ஏற்பாடுகள் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.

விழா நிகழ்ச்சிகளை ஆன்லைனில் ஒளிபரப்ப கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Next Story