போலீசார் தாக்கியதில் இறந்ததாக வழக்கு: மகேந்திரனின் தாயாரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
போலீசார் தாக்கியதில் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கில், மகேந்திரனின் தாயார் வடிவுவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் வடிவு. இவருடைய மகன் மகேந்திரன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரை சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை விடுவித்தனர். இதையடுத்து சில நாட்களில் மகேந்திரன் உயிரிழந்தார்.
இந்த நிலையில் வடிவு, போலீசார் தாக்கியதால் தான் தன்னுடைய மகன் உயிரிழந்ததாகவும், தனக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என்று கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து சி.பி. சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கினர். தூத்துக்குடி கே.வி.கே. நகரில் உள்ள மகேந்திரனின் அக்காள் சந்தனமாரியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நேற்று மாலையில் 2-வது நாளாக தூத்துக்குடி கே.வி.கே. நகரில் உள்ள சந்தனமாரியின் வீட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையில் போலீசார் சென்றனர். அங்கிருந்த மகேந்திரனின் தாயார் வடிவு, அக்காள் சந்தனமாரி ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சந்தனமாரியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு 2 பெண் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story